மதுரை
இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் , மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது இதில் சிறப்புரையாற்றிய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்தியாவை மாற்றோவோ முன்னேற்றவோ நம்மால் முடியாத நிலையில் தற்போதைய இந்தியா உள்ளது எனவே பாஜக ஆட்சியரிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்,
தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து ஜனநாயகத்தை காப்பற்றி பின்னர் நாட்டை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும், கடந்த 7மாத பாஜக ஆட்சியில் பொருளாதார, அரசியல் சாசன, தொழிலாளர்கள் வாழ்வுரிமை மீதான நெருக்கடியும், சமூக நல்லிணக்கத்திற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது,
பாஜக ஆட்சியில் வெறுப்பு அரசியல் , பெண்கள், மதவழி சிறுபான்மையினர் , தலித் மக்கள் மீது அனைத்து வகைகளிலும் நெருக்ககடியை சந்தித்துவருவதாகவும்,
குடியரசின் அடிப்படையவே அசைத்து பார்க்கும் நிலை உள்ளது எனவே அரசியல் சாசனத்தை பாதுகாக்க அனைத்து குடிமகன்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும்,
இந்திய குடியரசும், அரசியல் சாசனமும் மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவிட்டது,
மோடியும், அமித்ஷாவும் போராடுபவர்களை விரோதிகள் என்கின்றனர், இந்தியாவின் ஒரே புனித நூல் அரசியல் சாசனம் தான் , அதனை மோடியோ , அமித்ஷாவோ சீரழிக்க விடமாட்டோம்,
பாஜகவினர் என்னை ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஆதரவாளர்கள் என்கின்றனர் நான் மனிதநேயத்திற்கான ஆதரவாளர்,
பாஜக ஒவ்வொரு இந்தியனையும் மதத்தை வைத்து பிளவுபடுத்துகிறார்கள், குடியுரிமை சட்டம் என்பது அரசியல் சாசனத்தில் அடியில் கை வைக்கும் செயல் அதனால் அதனை எதிர்க்கிறோம்,
குடியுரிமை என்பதற்கு மதத்தை தகுதியாக மாற்றகூடாது,
குடியுரிமை என்பதற்கான வரையறையை மாற்றம் செய்வதால் தான் எதிர்க்கிறோம் என்றும்,
இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்திய குடிமக்கள் தான் என்ற அரசியல் வரையறை காப்பாற்ற வேண்டும் எனவும்,
CAA மூலமாக இஸ்லாமியர்கள் மட்டுமே பாதிக்கபடுவது போன்ற தவறான செய்திகளை பாஜகவினர் உருவாக்கிவருகின்றனர்,
CAAவால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிப்தில்லை அனைத்து சமூக ஏழைகள் , சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர், தலீத்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்,
NRCயில் பெயர் இடம்பெறாத நிலையில் NPRற்கான ஆவணங்களை காட்ட வேண்டும்,
NRC பற்றி நாங்கள் பேசவே இல்லையென அமித்ஷா கூறுவது பொய்,NRCயில் அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை சமர்பிக்கவில்லையெனில் நாம் சந்தேகத்திற்கு நாடற்ற நபர்களாக மாற்றுவார்கள்,
NRCஐ ஏற்க மாட்டோம் என்ற கூறும் மாநிலங்களும் ,NPRஐயும் ரத்து செய்ய வேண்டும் என வலியறுத்த வேண்டும்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் எங்கு செல்ல முடியும்,
புலம்பெயர்ந்தவர், பழங்குடியினர், நாடோடிகள் இருப்பிட சான்றிதழுக்கு எங்கே செல்வார்கள், இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுக்கு என்ன செய்வார்கள் , பரம்வீர் சக்ரா விருது அப்துல்ஹமீது என்பவர் தான் முதல் வீரர் அவருக்கு இஸ்லாமியர் என்பதற்காக அல்ல இந்தியன் என்பதற்காக விருது வழங்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரே ஆவணம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது,
பாஜக நாட்டில் குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்துகறது , பயங்கரமான மோசமான வாக்கு வங்கி அரசியலை நடத்துவது ஆர்எஸ்எஸ் பாஜக வகையறா தான் எனவும்,
நாங்கள் வாக்கு வங்க அரசியல் பண்ணவில்லலை,
மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் வாக்கு அரசியல் செய்கிறார்கள்,இந்திய அரசியலமைப்பின் குணாம்சத்தை தகர்கிறது பாஜக அரசு, இந்திய முழுவதிலும் அவசர நிலையை எதிர்த்து இளைஞர்களும் மாணவர்களும் போராடியது போல தற்போது அரசியலமைப்பை பாதுகாக்க போராடி வருகின்றனர்,
நாட்டில் அமைதியான முறையில் மட்டும் தான் போராட்டம் நடைபெறுகிறது, ஆனால் பாஜகவின் காவல்துறை அடக்குமுறை செய்து போராட்டத்தை தடுத்துவருகிறது,
பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 28பேரை சுட்டுகொன்றுள்ளனர்,
பாஜகவின் கூட்டணியான எடப்பாடி அரசின் காவல்துறையும் பாஜகவின் காவல்துறை போல செயல்படுகிறது,சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிரான்டிதனமானது,
காவல்துறையின் அடக்குமுறை எங்களது போராட்டத்தை ஒரு அடி கூட நகர்த்த இயலாது என்றும்,
டெல்லி தேர்தலில் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் யுக்தி பாஜக தோல்வியை கொடுத்துள்ளது அது மக்கள் கொடுத்த சவுக்கடி என்னும்,
ஆனால் தற்போதைய பாஜகவின் உண்மை முகத்தை மக்கள் அறிந்திவிட்டதால் பாஜக மாநில தேர்தலில் தோல்விகளை மட்டும் தழுவி வருகிறது,
பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை கடுமையாக நாட்டை பாதிப்புக்குள்ளாகிவிட்டது,
நாட்டின் சொத்து 112 பணக்காரர்களின் கைகளில் உள்ளது என்ற புதிய இந்தியாவை தான் மோடி உருவாக்கியுள்ளார்,
பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பணிகள் தான் நடக்கிறது என்றும்,
ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி ஆழமானதாகவும், அகலமானதாகவும் மாறிவிட்டது,
தொழிலதிபர்களுக்கான கடனை ரத்து செய்துள்ளது,
இது பணக்காரர்களுக்கான ஆட்சியாக உள்ளது,
2லட்சத்து 15ஆயிரம் கோடியை கார்ப்பரேட்டிற்கு வாரி வழங்கியுள்ளது பாஜக, உட்கட்டமைப்பிற்கு வழங்கிநிருந்தால் தொழிற்சாலைகளுக்கு உதவி தொழிலாளர்களும் பயன்பெற்றிருப்பார்கள்,
பொதுமக்களின் பணத்தை கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்குவது தேர்தல் காலத்தில் பாஜக கார்ப்பரேட்டிடம் பணம் வாங்கலாம் என்பதற்காக தான்
ட்ரம்ப்பை வரவேற்க மோடி தயாராகி வருகிறார் நாட்டின் பொதுச்சொத்துக்களை விற்பதற்கான டீல் - ற்கு தான் அவரை வரவேற்கிறார், ட்ரம்பை வரவேற்க மோடி பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறார்,
ட்ரம்ப் இந்தியாவில் எங்கு இறங்கினாலும் செங்கொடி ஏந்தி ட்ரம்ப் திரும்பி போ என போராடுவோம் ,அனைவரும் ஒன்று சேர்ந்து அரசியலமைப்பையும் , குடியரசையும் பாதுகாக்க போராடுவோம்,
மார்ச்1 முதல் 23ஆம் தேதி வரை வீடு பிரச்சார பயணம் மேற்கோள்ளவுள்ளோம் என்றும்,
NPRதொடர்பாக எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டாம் என கூறுகிறோம், அதனை பிரச்சாரம் மூலமாக எடுத்துரைப்போம்,
பாதிக்கும் மேற்பட்ட இந்தியா NRC வேண்டாம் என்றுகூறுவதால் அமித்ஷாவும், மோடியும் அரை இந்தியாவையும் தேசவிரோதிகள் என்பார்களா ?
இந்தியாவை பாதுகாப்பதும், அதன்பின் அதனை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக போராட வேண்டும்,மோடி அமித்ஷா நமக்கு என்ன பெயர சூட்டினாலும் கண்டுகொள்ளாமல் நாம்தான் தேச பக்தர்கள் என்பதை நிருபிக்க வேண்டும் ,இன்னும் அதி தீவிரத்தோடு போராட வேண்டும் என பேசினார்.